இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகரமாம் இரத்தினம் விளையும் பொழில் நிலமாம் இரத்தினபுரி மாநகரின் மத்தியிலே வில்வமரத்தை தல விருட்சமாகவும் களுகங்கையை புனித தீர்த்தமாகவும் கொண்டு களுகங்கைக் கரையினிலே எழுந்தருளி கோடான கோடி மக்களின் இன்னல் தீர்ப்பவராய் திகழும் ஸ்ரீ திருபுரசுந்தரி அம்பிகா சமேத இரத்தினசபேசர் சுவாமி சிவாலயமானது ஒரு புராதன வரலாற்றைக் கொண்ட சிறப்பு மிகச் சிவத்தலமாகும்.
இராமாயணக் கால இலங்கேஸ்வரன் என போற்றப்பட்ட சிவபக்தனான இராவணனின் தம்பதியாகிய விபூ~ணன் இரத்தினபுரியை தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இப் புனித பூமியிலே எழுந்தருளியுள்ள இவ்வாலயத்தின் பிரதான வாயிலிலிருந்து நோக்குமிடத்து நேரே சர்வ மதத்தவரும் வழிபடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவனொளிபாத மலை கம்பீரமாகக் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
இவ்வாறான பல சிறம்பம்சங்கள் பொருந்திய இவ்வாலயம் எழுந்தருளி காட்சி தருவதற்கு ஒரு புராதன கதையே உண்டு. அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு மகாகின் கனவிலே தற்போது இவ்வாலயம் எழுந்தருளியுள்ள இடத்திலே ஞானியொருவர் நிஸ்டையில் ஆழ்ந்திருந்தார். அவ்வேளையில் அவ்வழியே சென்ற மகான் ஒருவரிடம் ஆலயம் அமைப்பாயாக என்று கூற அந்த ஞானி நிஸ்டையில் இருந்த இடத்தில் எம்பெருமான் சிவனின் வாகனமான ரி~பம் ஒன்று நின்றதைக் கண்டு திகைத்துப் போனார். அவ்வேளையில் அவருக்கு ஒரு சிந்தனை தோன்றியது. அதாவது ஞானியர் நி~;டையில் ஆழ்ந்திருந்த இடத்திலே சைவத்தின் முழு முதற் கடவுளான எம்பெருமான் சிவனின் சிவத்தலத்தையே அமைக்க வேண்டும் என்பதை திருவாக்கால் திருவாயால் கூறாமல் திருச் செயலால் குறித்துக் காட்டியுள்ளார் என்று உணர்ந்து மனம் மகிழ்ந்து கட்டியெழுப்பிய ஒரு சிறப்பு மிக்க சிவத்தலமே எம்பெருமான் ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேதரராக் காட்சி தரும் இரத்தினேஸ்வரமாகும்.
இதன் விசேட ஒரு சிறப்பம்சமாக விளங்குவது மலைகள் சூழ்ந்த குன்றுகள் நிறைந்த மலையகத்தில் எழுந்தருளியுள்ள ஒரேயொரு சிவத்தலம் என்பதே. வருடத்தின் பங்குனி மாதத்திலே பங்குனி உத்திரத்தினத்திலே எம்பெருமான் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகா சமேதராக இரதத்திலே ஆரோகணித்து உலா வந்து எம் அடியவர்களின் இருள் நீக்கி இன்னல் போக்கி இன்முகம் காட்டி அருள் தரும் அலங்கார நிகழ்வு கண் கொள்ளாக் காட்சியாகும்.
தற்கால வழக்கில் இவ்வாலயத்தின் பெயர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகா சமேத இரத்தினசபேசர் சுவாமி சிவாலயம் என அழைக்கப்பட்ட போதிலும், 1964ம் ஆண்டு யாப்பின் 27ம் பிரிவின் பிரகாரம் இதன் பெயர் இரத்தினேஸ்வரம் என்பதாகும். கடந்த 2013.03.02ம் திகதி நடைபெற்ற மகா சபைப் பொதுக் கூட்டத்தில் இதற்கான விளக்கத்தோடு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. (அத்துடன் புதிதாக நிர்வாக சபைக்கு ஆலோசகர்கள் இருவரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்)